குட்கா ஊழல்...... குடோன் உரிமையாளர் மாதவராவின் வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் வைஸ்யா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Advertising
Advertising

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேர்கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை வரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர்.

5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று விடியவிடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மாதவராவை செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று  மாதவராவின் உதவியாளரிடமும்ம் நேற்று முன் தினம் அவரது மேலாளர்கள் 4 பேர் மற்றும் உறவினர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாதவராவை கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: