காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டதால் ஓரிரு இடங்களில் மின்தடை : மின்வெட்டு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை : மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வெட்டு குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது மத்திய தொகுப்பில் இருந்து 6,153 மெகாவாட்டிற்கு பதில் 3,335 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது, அதாவது 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டது என்று அமைச்சர் தங்கமணி பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இல்லை, எந்த காலத்திலும் மின்வெட்டு ஏற்படாது என்று தெரிவித்த அவர், காற்றாலையில் இருந்து வர வேண்டிய 3000 மெகாவாட் மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டதால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கடந்த 3 மாதமாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட தமிழகத்திற்கு தரப்படவில்லை என்றும் அனல்மின் நிலையங்களில் உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது,மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம், மின்சாரத்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது, பராமரிப்பு பணி எனக் கூறி கடந்த 3 மாதங்களாக கூடங்குளத்தில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: