அமெரிக்காவில் பாலியல் புகாரில் 50 ஆண்டு சிறை வழங்கப்பட இளைஞரை காப்பாற்றிய நாய்

அமெரிக்கா: அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்த ஜோசுவா ஹார்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது சுட்டப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய ஜோசுவா ஹார்னர்.வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாய் உயிரிழக்கவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர். வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: