மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டது : அமைச்சர் தங்கமணி

சென்னை : மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வெட்டு குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டது என்று அமைச்சர் தங்கமணி பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் காற்றாலை மின்உற்பத்தியும் திடீரென குறைந்துவிட்டதால் சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்வெட்டு உள்ளது என்று தெரிவித்த அவர்,அனல்மின் நிலையங்களில் உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்று கூறினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: