சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலை தயாரிப்பு : சிலையை வாங்க மக்கள் ஆர்வம்

நெல்லை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுசூழலை பாதிக்காதவாறு சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக கடந்த 1 மாதமாக சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சமாதான புறத்தில் இரவு பகலாக பணி நடந்து ஆயிரக்கணக்கான சிலைகள் தயார் நிலையில் உள்ளது. 1 அடி முதல் 10 அடி வரை 36 வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளது.

Advertising
Advertising

சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு 26 விதிமுறைகள் வகுத்திருக்கிறது. அதன்படி அனைத்து அனுமதிகள் பெற்ற பிறகே சிலை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுசூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு சிலைகள் தயார் செய்யப்பட்டவை என்பதால் பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: