நெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வெளியிட்ட டெண்டருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை : நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வெளியிட்ட டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. பொறியாளர் கமிஷன் கேட்டதாக ஒப்பந்ததாரர் புகார் தந்ததால் டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்லை கோட்டத்தில் ரூ.44 கோடிக்கு சாலை பணிக்கு ஜூனில் டெண்டர் விடப்பட்டது.

Advertising
Advertising

ஜூன் 25ம் தேதி  விடப்பட்ட டெண்டர் ஒப்பந்தம் முருகன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தம் ஒதுக்கப்பட்ட நிலையில் நெடுஞ்சாலை பொறியாளர் 10% கமிஷன் கேட்டதாக புகார் கூறப்படுகிறது. கமிஷன் கொடுக்க மறுத்ததால் ஒப்பந்தத்தை நெடுஞ்சாலை ரத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மனுதாரர் முருகனுக்கு தரப்பட்ட டெண்டரை ரத்து செய்து செப்டம்பரில் மறு டெண்டர் விடப்பட்டது.

மறுடெண்டர் விடப்பட்டதை ரத்து செய்யக் கோரி மனுதாரர் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்தார். அதில் 10% கமிஷன் கேட்ட பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், டெண்டர், மறு டெண்டருக்கு தடை விதித்தார். நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்ட கணிக்கணிப்பு பொறியாளர் பதில் தர நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே டெண்டரை ரத்து செய்யக் கோரிய ஒப்பந்ததாரர் முருகன், சிசிடிவி ஆதாரத்தை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: