நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தை மாணவர்கள் முற்றுகை: தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரிக்கை

நெல்லை: தமிழில் தேர்வு எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆங்கில வழியில் பட்டப்படிப்பு படிப்பவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறை அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றனர்.

Advertising
Advertising

மாணவர்களின் போராட்டம் குறித்து சென்னையில்  உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் 89 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழில் தெர்வு எழுதுவதற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை தடுக்க முயன்ற போது போலீசாருடன் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: