திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை

சென்னை: திருவள்ளூர் மப்பேடு அடுத்த பண்ணூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜான் பீட்டர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலும் விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இருவரும் இன்று காலை 9 மணி அளவில் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்பு 11மணி அளவில் வீடு திரும்பிய ஜான்பீட்டர் சமையல் அரை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து ஜான்பீட்டர் அளித்த புகாரின் பேரில் மப்பேடு காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சன்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை வேளையில் நடைபெற்ற இந்த கொள்ளை குறித்து அப்பகுதி முழுவது பபரபரப்பு நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: