சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என  பெயர் சூட்டப்பட வேண்டும்  என்றும் இதுகுறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: