கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கோவை: கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பிரபலமான பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் கல்லூரியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

குறிப்பாக மாணவர்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகளை பிறப்பித்ததால், அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் மாணவர்கள் கல்லூரியிலும், கல்லூரி விடுதியிலும் செல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்லூரி முடிந்தவுடன் மாணவர்கள் கல்லூரியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து , போராட்டத்தை கைவிடக்கோரி கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் இந்த கட்டுப்பாடுகளை நீக்கம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: