அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு : கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது.  10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி இருந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாக

Advertising
Advertising

மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75%. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 -ஆக உள்ளது. நான்கு அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். மேலும் 900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆனால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. தற்போதைய மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையானது 15,000 ஆக அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: