பிரதமர் மோடி ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக இறுதி செய்தார்: பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ரபேல் போர்விமானம் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக இறுதி செய்து நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக்கொடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.  பா.ஜ.க முன்னாள் அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா மற்றும் அருண் ஷோரி ஆகிய இருவரும் மத்திய அரசுக்கு எதிராக குற்றசாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் நாட்டின் பாதுகாப்புக்கு 126 விமானங்கள் தேவை என்று பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தெரிவித்திருத்ததாக கூறினர்.

Advertising
Advertising

ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் விமானங்களின் எண்ணிக்கையை 36 ஆக குறைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ராணுவ உபகரணங்கள் கொள்முதலுக்கான அனைத்து விதிகளையும் புறம் தள்ளிவிட்டு நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு விமானத்தின் விலை 670 கோடி ரூபாயிலிருந்து 1,670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், தங்களது ஆதரவு தொழிலதிபர்களுக்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பிரதமர் ரத்து செய்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: