பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் 414வது ஆண்டு விழா: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் பிரகாஷ் பருவத்தை முன்னிட்டு திருவிழாக் கோலம் பூண்டது. அமிர்தசரஸ் பகுதியில் அமைந்துள்ள ஹர்மந்திர் சாஹிப் பொற்கோவில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள், தங்கள் புனித நூலான குரு கிரந்த சாகிப் என்ற நூல் கோவிலுக்குள் அர்ப்பணித்ததன் நினைவாக 414வது ஆண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertising
Advertising

இந்த விழாவையொட்டி புனித நூலை ஊர்வலமாக கொண்டு சென்றனர். மேலும் ஊர்வலம் செல்லும் வீதிகளில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல புனித நூலை எடுத்துச் செல்லும் சாலைகளை பெருக்கி சுத்தம் செய்தபடி மக்கள் சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு பொற்கோவிலுக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சீக்கியர்களின் வீர வாள் சண்டை மற்றும் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவை சீக்கிய மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்த்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: