அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு  வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ.72.91 ஆக சரிந்துள்ளது.  இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

இந்த ஆண்டு தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63 ஆக இருந்தது. ஆனால், அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, தற்போது தாறுமாறாக சரிந்து வருகிறது. உலகச் சந்தையில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலையால், அனைத்து நாடுகளின் கரன்சி மதிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சீன பொருட்களுக்கு மேலும் வரியை கூட்ட அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அப்படி அமெரிக்க வரி விதிக்கும்பட்சத்தில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது.  ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலர் விலைக்கு எதிரான மதிப்பான ரூ. 71.69 காசுகளுடன் ஆரம்பமானது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது.  தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.72.91 ஆக சரிந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: