விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய், 3 குழந்தைகள் உயிரிழப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். திருக்கோயிலூர் அடுத்த மேலகொண்டூரில் நடநத சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய் தனலெட்சுமி(30), காமலேஸ்வரன்(7), ருத்ரன் (1) விஷ்ணுபிரியன் (5) ஆகியயோர் உயிரிழந்தனர். குடும்பத்தகராறில் தனலெட்சுமி 3 குழந்தைகள் உடன் தற்கொலையா, இல்லை எரித்து கொல்லப்பட்டார்களா என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

கணவருடன் தகராறு ஏற்பட்டு மாமியார் வீட்டில் தனலெட்சுமி குழந்தைகளுடன் தங்கியுள்ளார். தனலெட்சுமி தங்கியிருந்த குடிசை வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் இளங்கோவன் உள்ளிட்டோரிடம் அரகண்டநல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: