ஈரோடு அருகே பட்டாசு விபத்து : பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஈரோடு : ஈரோடு சாஸ்திரி நகர் அருகே பட்டாசு கொண்டுச் சென்ற வாகனம் வெடித்து  சிதறி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் அருகிலிருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒரு விற்பனையாளர் பட்டாசு பண்டல்களை  கொள்முதல் செய்து இன்று வீட்டில் இறக்கிக்கொண்டிருந்தார்.  

அப்போது பட்டாசு பண்டல்களை இறுக்கி வைத்தபோது இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் வளையகாரர் வீதியை சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: