ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஆஸ்திரேலியா தேசிய காட்சிக்கூடம், தமிழகத்தில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.ஆஸ்திரேலியாவின் தென்னிந்தியாவிற்கான துணை தூதர் மைக்கேல் கோஸ்டா, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜனை நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஆஸ்திரேலியா தேசிய காட்சிக்கூடம் தமிழகத்தில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ஆஸ்திரேலிய பழங்குடியினர் குறித்த திரைப்பட விழாவை சென்னையில் நடத்துவது, 2035ம் ஆண்டிற்குள் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் சார்ந்த ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் தமிழகம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கலாசார பரிவர்த்தனைகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.இந்த சந்திப்பின்போது ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வைத்தீஸ்வரன் உடனிருந்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: