வெள்ள நிவாரணம் கேரள அரசுக்கு ஒரு மாத ஊதியம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: கேரள வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மாத ஊதியத்தை வழங்கினார். மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக தனது ஒரு மாதம் பாராளுமன்ற உறுப்பினர் ஊதியம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் அளித்துள்ளார்.மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை நேரில் சந்தித்து 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டி கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: