பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 30ம்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் தேச தலைவர்களை அழைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும். ராஜிவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் இந்த 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் நிச்சயமாக தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வை மதித்து, அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு, ஆளுநருக்கு ‘டைம்’ எல்லாம் கொடுக்க முடியாது.

 பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏற்றிக்கொண்டே போவதை ஏற்க முடியாது. மத்திய அரசு கலால் வரியை 50 சதவீதம் அளவுக்கு குறைத்தால் எல்லா மாநில மக்களும் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் குறைந்த அளவுதான் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை வைத்துதான் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் போது, சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். எங்களை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தல் வரும்போதுதான் அறிவிப்போம். இணக்கம் என்பது வேறு கூட்டணி என்பது வேறு.   இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: