சில்லி பாயின்ட்...

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் அலஸ்டர் குக் (33 வயது) ஓய்வு பெற்றுள்ள நிலையில்,  இங்கிலாந்து மீடியா சார்பில் அவருக்கு 33 மது பாட்டில்கள் பரிசாக வழங்கப்பட்டன. 2006ல் அறிமுகமான குக் 161 டெஸ்டில் 12472 ரன் குவித்து (அதிகம் 294, சராசரி 45.35, சதம் 33, அரை சதம் 57) விடை பெற்றுள்ளார்.

Advertising
Advertising

* இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிளப் சாம்பியன்ஷிப்பில் வொர்செஸ்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

* பாகிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வு செய்யப்படவில்லை. ஆரோன் பிஞ்ச், பீட்டர் சிடில் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். 5 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளய்து. ஆஸ்திரேலியா: டிம் பெயின் (கேப்டன்/கீப்பர்), ஆஷ்டன் ஏகார், பிரெண்டன் டாக்கெட், ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஜான் ஹாலண்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க்.

* ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் டி20 போட்டித் தொடருக்கான ‘ஐகான்’ வீரர்களாக ஷாகித் அப்ரிடி, கிறிஸ் கேல், பிரெண்டன் மெக்கல்லம், ஆந்த்ரே ரஸ்ஸல், ரஷித் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: