பாட்டியை கொன்ற பேரன் கைது

தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் சின்னப்பொன்னு (95). இவரது மகன் மகாலிங்கம் (50). இவரது மகன் நவீன்குமார் (19). கடந்த 6ம் தேதி மது குடித்துவிட்டு நவீன்குமார் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை கண்டித்த பாட்டி சின்னப்பொன்னுவை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த சின்னப்பொன்னு பரிதாபமாக இறந்தார். புகாரின்படி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: