வங்கி மேலாளர் வீட்டில் 206 சவரன் கொள்ளை வழக்கு மதுரையில் பதுங்கிய 4 பேர் கைது

சென்னை,: வங்கி மேலாளர் வீட்டில் 206 சவரன் நகைகளை கொள்ளையடித்த மதுரையில் பதுங்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 133 சவரன் நகை, செல்போன், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன் (56). தனியார் வங்கி மேலாளர். கடந்த வாரம் யோகசேரன் குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய அன்று முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் யோகசேரன் குடும்பத்தை கட்டிப்போட்டு, 206 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த மகாராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைகளை ஆட்களை வைத்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Advertising
Advertising

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

யோகசேரன் மனைவி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். அவரை கவனித்துக்கொள்ள யோகசேகரனின் மகள் காவியா மதுரையை சேர்ந்த மகாராணியை வேலைக்கு சேர்த்துள்ளார். நல்ல நம்பிக்கைபெற வேண்டும் என்பதற்காக சுப்புலட்சுமியை மிகவும் பரிவுடனுன் பாசத்துடனும் கவனித்துவந்தார் மகாராணி. அவருடைய உபசரிப்பில் மயங்கிய சுப்புலட்சுமி, தங்களுடைய சொத்து மற்றும் நகைகள் குறித்த விவரங்களை மகாராணியிடம் கூறியுள்ளார். சுப்புலட்சுமியிடம் அதிகளவில் நகைகள் இருந்தது தெரிந்ததும் அந்த நகைகளை எப்படியாது கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட மகாராணி, அதற்காக மதுரையை சேர்ந்த அவரது உறவினர் அருண்குமார், நாகப்பட்டினம் வெளிபாளையம் ரயில் வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த மகாராணியின் உறவினர் செல்வம் (28), சுரேஷ் (26), உசிலம்பட்டியை சேர்ந்த கவுதம் (21) ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வரவழைத்து, கடந்த 9ம் தேதி மாலை கொள்ளை சம்பத்தை அரங்கேற்றினர். சந்தேகம் வராமல் இருக்க மகாராணியின் செல்போனையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.கொள்ளையர்கள் 10ம் தேதி மதுரையில் மதுரை-கோயமுத்தூர் சாலையில் ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான செல்வம், சுரேஷ், கவுதம் ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் 133 சவரன் நகையை தான் திருடினார்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 124 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 9 சவரன் நகையை மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்திடம் அடகுவைத்து ஜாலியாக செலவு செய்தனர். அவர்களிடம் இருந்து 3 விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் 2 பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து துரிதமாக செயல்பட்ட கொள்ளைக் கும்பலே மறுநாளே கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: