ரூபாய் மதிப்பு ரூ.72.73 ஆக சரிவு

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று ரூ.72.73 ஆக சரிந்தது.  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஒரு வாரம் சரிந்து வந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 26 காசு அதிகரித்தது. சரிவில் இருந்து இனி மீளுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார துவக்க நாளான நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு 94 காசுகளை இழந்து ரூ.72.67க்கு வீழ்ந்தது. மாலையில் ரூ.72.45க்கு நிலை பெற்றது.2வது நாளாக நேற்றும் மதிப்பு குறைந்தது.  நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும் முந்தைய நாளை விட 20 காசு உயர்ந்து ரூ.72.25 ஆக இருந்தது. பின்னர் வர்த்தக இடையில் முந்தைய நாளை விட மதிப்பு 28 காசு இழந்து ரூ.72.73ஆக சரிந்தது. டாலர் மதிப்பு வலுவடைந்து.

Advertising
Advertising

வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் பேரல் 78 டாலரை தாண்டியது போன்ற காரணங்களால் ரூபாய் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.  அதோடு, மத்திய அரசு இன்று வெளியிட உள்ள தொழில்துறை உற்பத்தி புள்ளி சரிவாகவும், பண வீக்கம் அதிகரித்தும் இருக்கும் என்ற கணிப்பும் வெளியாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமான ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்து நீடிப்பது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பை உயர்த்தும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஈடுபடுமா என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: