காற்றாலை மின் உற்பத்தி பாதிப்பு

நாகர்கோவில்:  நெல்லை, குமரி மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.   ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மின்உற்பத்தி அதிகமாக இருக்கும். காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, பின்பு பிரித்து வழங்கப்படும். காற்றாலையில் அதிக மின்உற்பத்தி இருக்கும் போது குமரி, நெல்லை மாவட்டங்களில் மின்வெட்டு இருக்காது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலையில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: