ரூ.55ஆக குறையும்... ஆனால்... கட்கரி வெளியிட்ட ரகசியம்

ராய்ப்பூர்: பயோ டீசல் உற்பத்தியை அதிகரித்தால் பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50க்கு விற்க முடியும் என நிதின் கட்கரி தெரிவித்தார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சாட்டீஸ்கர் மாநிலத்தில் வேளாண்துறை சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், கரும்பு உற்பத்தி இங்கு அமோகம். ஆனால், இந்த வேளாண் கழிவுகள் எந்த பயன்பாடும் இன்றி வீணாகி வருகின்றன. இதை பயன்படுத்தி இந்த மாநிலத்தை பயோ எரிபொருள் உற்பத்தி மையமாக்க முடியும். இந்த மாநிலத்தின் ஜத்ரோபா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட பயோ எரிபொருளை பயன்படுத்தி சமீபத்தில் விமானம் இயக்கப்பட்டது. பெட்ரோலிய பொருட்களை கைவிட்டு எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள், சிஎன்ஜி பயன்பாட்டுக்கு மாறினால் பெட்ரோல், டீசல் விலை குறையும். நாம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்கிறோம். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறக்குமதியை சார்ந்திருப்பதால்தான் ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

Advertising
Advertising

நம் நாட்டிலுள்ள விவசாயிகள், பழங்குடி மக்கள் போன்றோர் எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள் உற்பத்தி செய்யதால், விமானங்களை இயக்கும் அளவுக்கு அவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். மெத்தனால், எத்தனால், பயோ எரிபொருள், சிஎன்சி, போ டீசலில் இயங்கும் ஆட்டோ, பஸ், டாக்சி ஆகியவற்றுக்கு பர்மிட் தேவையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது.  அங்கு வைக்கோல், கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இவ்வாறு பயோ எரிபொருள் பயன்பாட்டின் மூலம் டீசல் லிட்டர் ரூ.50க்கும், பெட்ரோல் ரூ.55க்கும் விற்க முடியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: