ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் தொடர்ந்து மந்தம்

ஈரோடு: ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த ஒரு மாதகாலமாக வியாபாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடக்கும் ஜவுளி சந்தையில் வேட்டி, சட்டை, சேலைகள், லுங்கி, துண்டு, உள்ளாடைகள், பெட்ஷீட், ஜமக்காளம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிகள் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜவுளிகளை கொள்முதல் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுல்லாது வெளிமாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

Advertising
Advertising

 ஆனால் கடந்த 4 வாரங்களாக ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் வியாபாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருந்து வந்த நிலையில் நேற்று நடந்த சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் கலந்து கொள்ளாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், ஓணம் பண்டிகைக்கு முந்தைய வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக வெளிமாநில வியாபாரிகள்வரத்து நேற்று வியாபாரம் மந்த நிலையிலேயே இருந்து வருகிறது.

மொத்த வியாபாரம் அதிகரித்தால் மட்டுமே ஜவுளி சந்தை வியாபாரிகள் லாபம் எதிர்பார்க்க முடியும். ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வாரம்தோறும் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்த வந்த நிலையில் தற்போது ரூ.50 லட்சத்தை கூட தாண்டுவதில்லை. தீபாவளி சீசன் வியாபாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: