பசுந்தாள் விலை சரிவு: விவசாயிகள் கவலை

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகும் பசுந்தாள் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தீவனங்களுக்கு தட்டுப்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் விவசாயிகள் தீவனம் வாங்கி கட்டுப்படியாகாமல் கால்நடை வளர்ப்புத் தொழிலையே கைவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கு வைக்கோல், புண்ணாக்கு, செயற்கை தீவனம் ஆகியவை இருந்தாலும் இதற்காக அதிகமாக விவசாயிகள் செலவிட வேண்டிய நிலையும் உள்ளது.  எனவே, டெல்டா மாவட்டகால்நடை விவசாயிகள் மத்தியில் பசுந்தீவனம் பிரபலமாகி வருகிறது. பண்ணைகளில் பம்பு செட் வைத்து பாசனம் செய்பவர்கள் தங்களிடம் சாகுபடிக்காக உள்ள இடத்தில் சிறிது பரப்பளவில் பசுந்தீவனம் பயிரிடுகின்றனர்.

 கரும்பு, வாழை இடையே கோ 4 என்ற பசுந்தாள் பயிரிட முடியும். 60 நாட்களுக்கு பின்னர் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்யலாம். கட்டு ஒன்று ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை ஆகும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவால் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கரில் மட்டும் பசுந்தாள் குறைவாக பயிரிட்டனர். ஏக்கருக்கு 10 டன் கிடைத்தது. இதனால் நல்ல விலைக்கு சென்றது. ஆனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில்  தண்ணீர் அதிக அளவில் செல்லும் காரணத்தால் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  விவசாயிகள் பசுந்தாள் பயிரிட்டுள்ளனர். இதனால் உற்பத்தி அதிகரித்து விலை  சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது கட்டு ஒன்று ரூ.3 முதல் ரூ.4 வரையே விலை  போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: