எலுமிச்சை விலை ஏறுமுகம் ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனையாகிறது.  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் பரவலாக உள்ளது. இங்கு விளையும் எலுமிச்சம் பழங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தற்போது எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. 2 நாள் முன்பு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.20 முதல் ரூ.25 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியையொட்டி எலுமிச்சை விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. விசேஷ தினங்கள் முடிந்ததும் எலுமிச்சை விலை சீராகும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: