ஊழல் புகார் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? அமைச்சர் வேலுமணிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: ஊழல் புகார் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று அமைச்சர் வேலுமணிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு துறை ஆணையரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அதற்கு அவர் என் மீதான ஊழல் புகாரை நிரூபித்தால் நான் அரசியலில் இந்து விலகுகிறன் என்று கூறியிருக்கிறார். அவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். நான் தந்த ஊழல் புகார் குறித்து வேலுமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஒரே மேடையில் விவாதிக்க அவர் தயாரா?. நான் கூறும் புகார்கள் தவறு என்று அவர் கூறினால் என் மீது வழக்கு போடட்டும். அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் சென்னை மாநகராட்சியில் ரூ.900 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால், தற்போது ரூ.2500 கோடி கடன் இருக்கிறது. இதில் இருந்து அவரின் நிர்வாக திறனை தெரிந்து கொள்ளலாம்.

Advertising
Advertising

பொய் வழக்கு என்றால் வழக்கு தொடரட்டும். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி முருகன் மீது பாலியல் புகார் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறோம். ஊழல் மந்திரியை காப்பாற்ற எடப்பாடி முயற்சி செய்கிறார். ஏனென்றால் அவரும் ஊழலில் சிக்கி தவிக்கிறார். இந்த ஊழல்கள் குறித்து மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே குப்பைகளை ஆய்வு செய்யும் கவர்னர், இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது. வேலுமணியை தொடர்ந்து தற்போது அமைச்சர் தங்கமணி மீதான புகார்கள் அவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார். நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: