விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை கடத்திய மூதாட்டி: வேலை முடிந்து வந்த தந்தை மடக்கி பிடித்தார்

சென்னை: வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 2வயது குழந்தையை கடத்த முயன்ற மூதாட்டியால் நெற்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நெற்குன்றம் அன்புநகர் தங்கசாமி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் கவுதம் (29), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ரக்‌ஷனா என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு கவுதம் மனைவி வீட்டிற்குள் இருந்தார். அப்போது ரக்‌ஷனா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அங்கு வந்த 62 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த ரக்‌ஷனாவை தூக்கிக்கொண்டு தெருவில் சென்றுள்ளார். அந்த நேரம் கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertising
Advertising

தனது மகளை மூதாட்டி ஒருவர் தூக்கி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி சென்று மகளை மூதாட்டியிடம் இருந்து மீட்டார். உடனே பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை கடத்த முயன்ற மூதாட்டியை பிடித்தனர்.இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் கவுதம் புகார் அளித்தார். போலீசார் பொதுமக்களிடம் இருந்து மூதாட்டியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த ரீடா (62) என்பது தெரியவந்தது.  அவரை கைது செய்து எதற்காக நெற்குன்றத்திற்கு வந்தார். குழந்தை கடத்தும் நோக்கில் வந்தாரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: