போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல்: முன்னாள் காங். எம்எல்ஏ கைது

ஐதராபாத்: தெலங்கானாவில் போலி ஆவணங்கள் மூலமாக 3 பேரை அமெரிக்காவிற்கு கடத்திய முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயப்பிரகாஷ் ரெட்டி என்கிற ஜெகா ரெட்டி. இவர் கடந்த 2004ம் ஆண்டு எம்எல்ஏ.வாக இருந்தபோது செகுந்தராபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது மனைவி, மகள், மகன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்தார். பின்னர், அவர்களை அமெரிக்கா அழைத்து சென்ற அவர், 3 பேரையும்  நியூயார்க்கில் விட்டு விட்டு தனியாக நாடு திரும்பினார். விசாரணையில்  போலியாக ஆவணங்கள் தயாரித்து  வேறு நபர்களை சட்ட விரோதமாக அமெரிக்கா அழைத்து சென்றது தெரிய வந்தது.  இது பற்றி அறிந்த போலீசார், ஜெயப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குற்றம் நடந்தது உறுதி ஆனதால், நேற்று முன்தினம் இரவு ஜெயப்பிரகாஷ் ரெட்டியை கைது செய்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: