அரசாணை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை எச்ஐவி, எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் அமல்: டெல்லி ஐகோர்டில் தகவல்

புதுடெல்லி: எச்ஐவி, எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்களை காப்பாற்றும் பொருட்டும், மருத்துவம், கல்வி, வேலை மற்றும் வீடு ஆகியவற்றில் உரிய உரிமை பெறும் ெபாருட்டும், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி கடந்த ஆண்டு ஏப்ரல் 20ல் ஒப்புதல் அளித்தார். ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ெபாதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

Advertising
Advertising

அப்போது, ‘‘நீங்கள் ஒரு சட்டத்தை உருவாக்குகிறீர்கள். ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை. இப்படி நடந்து கொள்வது ஏன்? ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரும்  மத்திய அரசு இன்னும் ஏன் அரசாணை வெளியிடவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினர். இந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம் 2018 செப்டம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

எய்ட்சால் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சட்டத்திற்கு ஜனாதிபதி 2017 ஏப்ரல் 20ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் (முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2017 என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள்:

* .எய்ட்ஸ் பரவுவதை தடுப்பது

* .எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கான மனித உரிமை பாதுகாப்பை வழங்குவது.

* .எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள் பிறருடன் இணைந்து வாழ்வதை உறுதி செய்வது.

* .எய்ட்சால் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை இழைப்போருக்கு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்க வழி வகை செய்வது.

* .எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை தொடர்புடையவர்களின் ஒப்புதல் இல்லாமலோ, நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலோ வெளியில் சொல்லக் கூடாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: