இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் போராடி தோற்றது இந்தியா

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முன்னதாக முதலில் முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் ஆடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னா் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்கள் எடுத்து டிக்ளா் செய்தது. இதனையடுத்து 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: