இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்தியாவின் ரிஷப் பண்ட் சதம் விளாசல்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட் சதம் விளாசினார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  121 ரங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல்-பண்ட் இணை இங்கிலாந்து பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியை சரிவிலிருந்து மீட்டது.

ராகுல் டெஸ்ட் அரங்கில் 5-வது சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பண்ட் முதல் சதத்தை பதிவு செய்தார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்தது. பண்ட் 101 ரன்களுடனும், ராகுல் 142 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் வெற்றிக்கு 33 ஓவர்களில் இந்தியா 166 ரன்கள் அடிக்க வேண்டும். 

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: