கர்நாடகாவில் கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்..... மனைவியின் தலையோடு போலீசில் சரணடைந்த கணவர்

தரிகெரே: கர்நாடகாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய இளைஞர், அதனை  20 கி.மீ தொலைவு பைக்கில் கொண்டு சென்று போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தின் தரிகெரே தாலுகாவின் சிவானி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் (35). இவருக்கும் ரூபா (28) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.

அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார். அப்போது அவர் இவள் என்னை ஏமாற்றிவிட்டாள். தோட்டத்தில் ஒரு பையனுடன் இருப்பதைக் கண்டேன். இவளை கொலை செய்துவிட்டேன். அவன் தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: