கொல்லங்கோட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கொல்லங்கோடு: கன்னியாக்குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக கேரள பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மாவட்ட வருவாய்த்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை மறித்து சோதனை செய்ய முற்பட்ட போது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார்.

Advertising
Advertising

அதிகாரிகள் வாகனத்தை துரத்தி சென்ற நிலையில் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றார். காரில் சோதனை செய்த போது அதில் 1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: