சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சம்பங்கி பூ விலை புதிய உச்சம்....

ஈரோடு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 1கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு கோவை, பெங்களுரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால் சம்பங்கி பூ விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 1கிலோ ரூ.200க்கு ரூபாய்க்கு சம்பங்கிப் பூ விற்பனையான நிலையில், இன்று 1கிலோவிற்கு 300 ரூபாய் உயர்ந்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: