லிபியாவில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் : 2 பேர் பலி

திரிபோலி : லிபியா தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்திய தாக்குதலில் இருவர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், எண்ணெய் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் எண்ணெய் நிறுவனத்தின் 2 காவலர்கள் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் இருவரும் பலியாகினர்”

Advertising
Advertising

மேலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், மூன்று அல்லது ஐந்து  துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருந்ததாகவும், பலர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: