நைஜீரியவில் எரிவாயு டாங்கர் லாரி வெடித்து 35 பேர் பலி

அபுஜா : நைஜீரியவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறியதால் 35 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அவசர சேவைகள் அதிகாரி தெரிவித்துள்ளார். வடக்கு நைஜீரியவின் லபியா-மக்ரிடி லிங்க் சாலையில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டேங்கர் லாரியில் எரிவாயு நிலையத்திற்கு, எரிவாயு மாற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானோர், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரைந்த பொதுமக்கள் ஆவர்.

இதேபோன்று,  ஜூன் மாதத்தில் நைஜீரியாவின் லாகோஸ் தலைநகரில் ஒரு பெட்ரோல் டாங்கர் தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  53 வாகனங்கள் தீயில் கருகியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: