அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை மீண்டும் சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.அப்போது வட கொரியா தனது அணு சோதனைகளை நிறுத்துவது மற்றும் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுதாகின. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அலுவலகத்திற்கு கிம்ஜோங் உன் கடிதம் மூலம் மீண்டும் டிம்ப்பை சந்திக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: