சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் வர்த்தகம் பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் அதிகாலை 270 விசைபடகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறது. மீன்பிடிக்க செல்லும் விசைபடகுகள் இரவு கரை திரும்ப வேண்டும். இந்த துறைமுகத்தில் மீன்பிடித்து வரப்படும் மீன்களை வாங்கி செல்ல பல வியாபாரிகள் வருவது வழக்கம். இதனால் தினமும் ₹2 கோடி முதல் ₹3 கோடி வரை வர்த்தகம் நடக்கும். கேரள மாநிலத்தில் பெய்த பலத்தமழையால் வியாபாரிகள் வரத்து குறைந்தது. இதனால் மீனவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

 இந்நிலையில் கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் கேரள வியாபாரிகள் சின்னமுட்டத்திற்கு வரதொடங்கியுள்ளனர்.

நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த வேலை நிறுத்தம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் அனைத்து விசைபடகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ₹3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: