சில்லி பாயின்ட்...

* ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இலங்கை அணி: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தசுன் ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, தில்ருவன் பெரேரா, அமைலா அபான்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா.

* யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 7வது இடத்துக்கும், ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: