தலிபான்கள் பயங்கர தாக்குதல்: ஆப்கன் வீரர்கள் 37 பேர் பரிதாப பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 37 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் குந்துஷ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்சி மாவட்ட சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்த துப்பாக்கி சண்டையில் 13 வீரர்கள் பலியானதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் மாகாண தலைவர் முகமது யூசோப் ஆயுபி கூறி உள்ளார்.  

Advertising
Advertising

இதேபோல, ஜோவ்ஸ்ஜான் மாகாண போலீஸ் தலைமை ஜெனரல் பகீர் முகமது கூறுகையில், ‘‘காம்யாப் மாவட்டத்தில் தலிபான்கள் பல்வேறு இடங்களில் இருந்து மறைந்திருந்திருந்து கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 8 போலீசார் பலியாயினர். பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டனர்’’ என்றார். தாரா சுப் மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 14 போலீசார் பலியாகி உள்ளனர்.  சாரிபால் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அரசு ஆதரவு ராணுவ உதவிப்படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: