தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு : இருவர் படுகாயம்

சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாட்டின் தலைநகரான ஜுபா நகரில் இருந்து சிறிய ரக விமானம், ஈரோல் என்ற நகருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏரியில் விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertising
Advertising

பலத்த காயடைந்த நிலையில் மீட்கப்பட்ட, 6 வயது குழந்தை மற்றும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: