அசத்தும் நிஸான் கிக்ஸ் கார்

இந்திய கார் மார்க்கெட்டில், நிஸான் கார் நிறுவனம் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரக காரும் இடம்பிடித்துள்ளது. இந்த 5 சீட்டர் எஸ்யூவியின் உட்புறம் மிகவும் சவுகரியமான இடவசதியை அளிக்கும். அதிக அளவில் உடைமைகளை எடுத்துச்செல்ல பூட் ரூம் இடவசதியையும் பெற்றிருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் அறிமுகம் செய்யப்படும். வெளிநாடுகளில் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் கிடைத்தாலும், இந்தியாவில் கொடுக்கப்படுவது சந்தேகம்தான். ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: