அசத்தும் புதிய பஜாஜ் பல்சர் பைக்

பஜாஜ் பல்சர் என்.எஸ் 160 பைக்கில் (Pulsar NS 160) ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதி கிடையாது. இந்த குறையை களையும் விதமாக, பல்சர் என்எஸ் 160 பைக்கில், ஏபிஎஸ் வசதியை சேர்க்கும் பணிகளில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பல்சர் என்எஸ் 160 பைக்கில், குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி இனி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏபிஎஸ் வசதியுடன் கூடிய புதிய பல்சர் என்எஸ் 160 பைக், வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்துவதுடன், பகல் நேரத்தில் எரியும் எல்இடி உள்ளிட்ட ஒருசில கூடுதல் வசதிகளும் பஜாஜ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அத்துடன், கிராபிக்ஸ் மற்றும் பெயிண்ட் ஸ்கீமிலும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இவை தவிர, மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படாது என பஜாஜ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertising
Advertising

தற்போதைய பல்சர் என்எஸ் 160 பைக்கின் மொத்த எடை 142 கிலோ. எனினும், கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி சேர்க்கப்படுவதால், புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கின் எடை, 2-3 கிலோ வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதயை பல்சர் என்எஸ் 160 பைக், சிட்டி ரோடுகளில் லிட்டருக்கு 40.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கிலும் அதே மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.அப்படியே மைலேஜ் சிறிதளவு குறைந்தாலும்கூட, ஏபிஎஸ் என்ற பாதுகாப்பு அம்சம் கிடைப்பது முக்கிய அம்சம். 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து டூவீலர்களிலும் பாதுகாப்பு கருதி, குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்படுவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகிறது. மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்புதிய பைக்கின் தற்போதைய விலை சுமார் 82 ஆயிரம் ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: