மலைக்க வைத்த புதிய ஹோண்டா அமேஸ்

புத்தம் புதிய 2018 ஹோண்டா அமேஸ் காரை, ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது வரை வெறும் 3 மாதங்கள்தான் ஆகிறது. ஆனால், அதற்குள்ளாகவே 30,000-க்கும் மேற்பட்ட அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. அறிமுகம் செய்யப்பட்ட மூன்றே மாதத்தில் 30 ஆயிரம் என்ற இலக்கை எட்டியது ஹோண்டா நிறுவனத்தின் முதல் கார் அமேஸ்தான். இதன்மூலம் புதிய வரலாற்றை அமேஸ் படைத்துள்ளது. புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியாதான். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து, அதற்கு ஏற்ற வகையில் அமேஸ் காரை கட்டமைத்தது ஹோண்டா நிறுவனம். இதன்மூலம்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. ஹோண்டா அமேஸ் கார், காம்பேக்ட் செடான் வகையை சேர்ந்தது. இந்த காரின் கவர்ச்சிகரமான டிசைன், விசாலமான இன்டீரியர்கள், டிரைவிங் பெர்பார்மென்ஸ், பாதுகாப்பு டெக்னாலஜி மற்றும் அட்டகாசமான வசதிகள் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன.

Advertising
Advertising

மொத்தம் 12 வேரியண்ட்களில் புதிய அமேஸ் காரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், பெட்ரோல் சிவிடி மற்றும் டீசல் சிவிடி வேரியண்ட்கள்தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன. ஏனெனில், அறிமுகம் செய்யப்பட்டது முதல், விற்பனையான மொத்த அமேஸ் கார்களில் 30 சதவீதம், பெட்ரோல் சிவிடி மற்றும் டீசல் சிவிடி வேரியண்ட்கள்தான். அதேநேரத்தில், இதன் இ, எஸ், வி, விஎக்ஸ் உள்ளிட்ட சில வேரியண்ட்களின் விலையை 10,000-35,000 வரை ஹோண்டா நிறுவனம் உயர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது. 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஹோண்டா அமேஸ் காருக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு, போட்டியாளர்களை மலைக்க வைத்துள்ளது. இப்புதிய கார், மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் எக்ஸெண்ட், போர்டு ஆஸ்பயர், போக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட கார்களுடன், ஹோண்டா அமேஸ் போட்டியிடுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: