இதய ஓட்டத்தை சீர்செய்யும் கொய்யா

கொய்யாவை இந்தியன் ஆப்பிள் என்பார்கள். அவ்வளவு சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளது. வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் அதிகளவில் இருக்கும். ஆரஞ்சு பழத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி இதில் உள்ளது. இப்பழத்தை சாப்பிட்ட பின்னர் பால், தேன், கற்கண்டு, பனங்கற்கண்டு ஏதேனும் சாப்பிட்டால் ஆப்பிளைவிட சிறந்த சக்தியை அடையலாம். இப்பழம் கிடைக்காத காலங்களிலும் உண்ண ஜாம் செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம்.

இலையை மென்று குதப்பி பற்களை தேய்த்தால் பல்வலி நீங்கும். கொய்யா மரப்பட்டையை நீரில் ஊறவைத்து அந்நீரை குடித்தால் புண்கள் சரியாகும். கொய்யா பழத்தை சாப்பிட்டால் மலம் இளகும். பிஞ்சு வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றை சரி செய்யும். பற்களுக்கு உறுதி தரும். உடம்புக்கு குளிர்ச்சி அளிக்கும். இதய ஓட்டத்தை சீர்செய்யும். அதிகம் உண்டால் பசிமந்தம் உண்டாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: