தகவல் பலகை

மனிதன் இறந்த பிறகும் முடி வளருமா....?

இது உண்மைதான். சராசரியாக ஒரு மனிதனின் தலைமுடி ஒரு மாதத்தில் அரை அங்குலம் வளர்கிறது. மனிதனின் தலைமுடி மூன்று அடுக்குகளைக் கொண்டது. அவை: க்யூட்டிக்கிள், கார்டெக்ஸ், மெடுல்லா. ஒவ்வொரு தலைமுடிக்கும் வேர் உள்ளது. இது தோலின் கீழே பை போன்ற பகுதியில் அமைந்திருக்கும். தலைமுடிவேரின் கீழே பப்பிலா என்ற பகுதி காணப்படுகிறது. தலைமுடி வளர்வதற்கான சத்துக்கள் இதில் இருந்தே பெறப்படுகிறது.

பப்பில்லாவைச் சுற்றி புதுப்புது செல்கள் உருவாகி அவை தோலைவிட்டு வெளியேற்றப்பட்டு தலைமுடியாக வளர்கிறது. நமது தலைமுடி என்பது இறந்த செல்களே. எனவேதான் தலைமுடியை வெட்டும் போது நமக்கு வலி தோன்றுவதில்லை. ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது உடலில் செல்கள் உருவாவது தொடர்ந்து கொண்டே இருக்கும். உடலில் சத்துக்கள் முழுவதும் அழியும்வரை அவனது தலைமுடியின் வேர்ப்பகுதியில் புதுப்புது செல்கள் உருவாகி தலைமுடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

திருமணமாகாத ஓய்வூதியர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் யாருக்குக் கிடைக்கும்?

* ஒருவர் ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
* ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தங்களது ஓய்வூதிய புத்தகத்தை கருவூலக அலுவலரிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.
* திருமணமாகாத அரசு ஊழிய ஓய்வூதியர் காலமானால் அவரது தகப்பனார் / தாயார் / மாற்றாந்தாய் / திருமணமாகாத 25வயதிற்கு  உட்பட்ட ஊனமுற்ற  சகோதர, சகோதரிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
* ஓய்வூதியர் மரணத்திற்குப்பின் அவரது வாழ்க்கைத்துணைக்கு ஆயுட்காலம் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். இவரது மரணத்திற்குப்பிறகு ஊனமுற்ற வாரிசு, திருமணமாகாத மகள் / விதவை / விவாகரத்தான மகள் ஆகியோர்க்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உண்டு.
* ஓய்வூதியப்புத்தகம் காணாமல் போயிருந்தாலோ, கிழிந்து விட்டாலோ எவ்வித கட்டணமுமின்றி ஒப்புதல் கடிதம் கொடுத்து மாற்றுப்புத்தகம் பெறலாம்.

ஓசோன் ஓட்டை என்றால் என்ன..?

வளிமண்டலத்தில் ஓசோன் தனிமத்தால் இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ள படலமே ஓசோன் படலம் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்களை பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இக்கதிர் மனிதனுக்கு புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் பல்வேறு எரிபொருட்களில் இருந்து வெளிப்படும் க்ளோரோஃப்ளூரோகார்பன்களே இப்படலத்தை வெகுவாய் சிதைக்கிறது. குளோரின், ப்ளோரின் போன்ற வாயுக்கள் ஓசோனில் உள்ள ஆக்சிஜன் அணுக்களோடு வினைபுரிந்து குளோரின் மோனாக்சைடு மற்றும் ஆக்சிஜனாக மாறுகிறது. எனவே அந்த இடத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து விடுகிறது.

இதுபோன்ற பாதிப்பு அண்டார்டிகா பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகிறது. ஆனால் உலகின் தென்துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஓசோன் படலத்தில் எந்தச்சிதைவும் இல்லாத நிலை உள்ளது. ஓசோன் படலத்தில் ஓட்டை என்பது முழுமையான ஓட்டை அல்ல. ஸ்ட்ராட்டோஸ்ஃபியர் பகுதியில் காணப்படும் ஓசோனில் ஓரிடத்தில் மட்டும் ஓசோன் அடர்த்தி குறைந்து காணப்படுவதையே ஓசோன் ஓட்டை என்றழைக்கிறோம். அவ்விடத்தில் சூரியனின் புறஊதாக்கதிர்கள் எளிதாக நுழைந்து பூமிக்கு வந்துவிடும். இதனால் பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: