தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்கள் உள்ளன. இதுவரை நடந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள 2445 இடங்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் நடைப்பெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.

Advertising
Advertising

கடந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ் யில் சேர்ந்தனர். எந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 4 ஆகா அதிகரித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இது 100% அதிகமாகும். தமிழில் வெளியான நீட் வினாத்தாளில் இருந்த தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப் பட்டிருந்தால் இந்த எண்ணிகை மேலும் அதிகரித்து இருக்கும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் ஆண்டுளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்தாண்டு +2 படித்த மாணவர்களே இந்த ஆண்டு அதிகளவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: